fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » திருமலையில் நடிகை சமந்தா வழிபாடு
சினிமா

திருமலையில் நடிகை சமந்தா வழிபாடு

நடிகை சமந்தா அவரது கணவர் நாகசைதன்யா உடன் அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

      சமந்தாவும், அவரது கணவர் நாகசைதன்யாவும் இணைந்து நடித்துள்ள மஜ்லி என்ற தெலுங்கு திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி சமந்தா நாகசைதன்யா மற்றும் திரைப்படக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை வி.ஐ.பி.பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர். திருமணத்துக்குப் பின் சமந்தாவும் நாகசைதன்யாவும் இணைந்து நடித்த முதல் படம் என்பதால் இருவரும் இணைந்து கோயிலுக்கு வந்திருந்தனர். தரிசனம் முடித்துத் திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.

திருமலையில் நடிகை சமந்தா வழிபாடு

     பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த சமந்தாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். இதனால் திடீரென்று அந்தப் பகுதியில் பரபரப்பு கூடியது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமந்தா, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழிபாடு நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மஜ்லி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

எளிமையாக நடந்த குறளரசன் திருமணம்

N N

ரசிகர்களுக்கு மாளவிகா மோகனனின் புத்தாண்டு வாழ்த்து !

TamilTwin India

”பொன்னியின் செல்வன்” சூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய பிரபலம்!

TamilTwin India