
சினிமாவில் ரீ – எண்ட்ரி கொடுக்க உள்ளார் லைலா. இவர் 1999 – இல் கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள் முதல் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் இவர் நடித்து இருந்தார். அதன் பின்பு இவர் 2006 – ஆம் ஆண்டு மெக்தின் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்தார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இவர் நடிக்காமல் இருந்தார். இப்பொழுது மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்க வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கண்டநாள் முதல் படத்தில் நடித்த இருந்த பிரசன்னா, கார்த்திக் குமார், லைலா மற்றும் படத்தை இயக்கிய பிரியா ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர். கண்டநாள் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது அதில் லைலா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன் அவர் ஆலிஸ் என்ற திகில் படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.