மகா சிவராத்திரி விழா நேற்று ஈஷா மையத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பல பிரபலங்கள் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளனர். கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும். அதே போல், ஈஷா யோகா மையத்தின் 25 – ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா ஆதியோகி சிலை முன்பு நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கு ஏற்றார். இவருடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி பியூஸ் கோயல், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நாகராஜன் எம்.பி., ஜனாதிபதியின் மனைவி சவிதா கோவிந்த், மகள் சுவேதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் நடிகைகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். நடிகர் ராணா, நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா, அத்தி ராவ், சுஹாசினி, சுகி சாவ்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மாலை 4 மணி அளவில் விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆடி உள்ளனர். பாடகர்கள் கார்த்திக், ஹரிகரன் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு பாட்டு பாடினர்.