fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

மீம் போட்டு கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஆத்மிகா

                சினிமாவில் மீசைய முறுக்கு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஆத்மிகா.  இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேறு சில படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.  மீசைய முறுக்கு படத்தில் இவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜோடியாக நடித்து இருப்பார்.  தற்போது நடிகை ஆத்மிகா தன்னை கிண்டல் செய்து சமூக வலை தளங்களில் போடப்பட்டுள்ள மீம்களுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.

மீம் போட்டு கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஆத்மிகா

      சினிமாவில் ஆண் நடிகர்களில் அதிகமானோர் பெண் வேடம் இட்டு நடிக்கின்றனர்.  பெண் வேடம் இட்டு நடித்த நடிகர்களின் புகைப்படத்துடன் நடிகை ஆத்மிகாவின் புகைப்படத்தினையும் இணைத்து சமூக வலைதளங்களில் ‘பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்’ என கிண்டலாக மீம் போட்டு வருகின்றனர். 

      இந்த மீமை தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவருக்கு நடிகை ஆத்மிகா தக்க பதிலடியினை கொடுத்து இருக்கிறார்.  அப்பதிவில், இவ்வளவு அசிங்கமான சிந்தனையோடு சிறு வயது முதல் வளர்க்கப்பட்டு இருக்கிறாயே என வருத்தப்படுகிறேன்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகு தான்.  கடவுள் எங்களை படைத்த விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என அவர் மறுபதிவு செய்து உள்ளார்.

Related posts

திரிஷாவின் கர்ஜனை படத்தின் புதிய அப்டேட்

N N

விஜய்யின் மாஸ்டரையும் ஓட விட்ட கொரோனா !

TamilTwin India

ரஜினியிடம் ஆசிர்வாதம் பெற்று புத்தாண்டை ஆரம்பித்த லாரன்ஸ்

TamilTwin India