fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நடிகர் விவேக் எந்த கட்சியிலும் இல்லை

நகைச்சுவை நடிகரான விவேக், சினிமாவில் லஞ்சம், அரசியல் ஊழல், மூட நம்பிக்கை போன்றவற்றை எடுத்துரைப்பதை வழக்கமாகக் கொண்டவர். இதற்கிடையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துவிட்டார் என்று வந்த வதந்தியை மறுக்கிறார் விவேக்.

ஏப்ரல் 18 ம் தேதி நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் நடிகர் விவேக் இணைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விவேக் எந்த கட்சியிலும் இல்லை

இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் நான் எந்தக் கட்சியிலும், அமைப்பிலும் இல்லை என்றும் பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை, எனவே அதைச் செவ்வனே செய்வேன் என்றும் அனைத்துக் கட்சியினர், தலைவர்கள், என் நண்பர்கள். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினார். ரஜினியோ, கமலோ யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், வந்தபிறகு, நூறு சதவீத அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றெல்லாம் முன்பு கருத்து சொன்ன விவேக், இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Related posts

பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு வந்த சிக்கல் !

TamilTwin India

ஜிப்ஸி படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது !

TamilTwin India

இயக்குநரை மிரட்டும் மீரா மிதுன்

N N