நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கும் அயோக்யா படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதியில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், ஒருவழியாக ஏப்ரல் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என உறுதியானது.
அயோக்யா படத்தை அடுத்து விஷால் ஆம்பள படக்குழுவுடன் வேறொரு படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் விஷாலை வைத்து சுந்தர்.சி மீண்டும் ஒரு படம் எடுக்க உள்ளார்.
2015 ஆம் ஆண்டு வெளிவந்த விஷால், ஹன்சிகா மோத்வானி, பிரபு, ரம்யா கிருஷ்ணன் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்த படம் ஆம்பள, இப்படத்தை இயக்கியவர் சுந்தர்.சி.
விஷாலை வைத்து இயக்கும் அடுத்த படத்திலும் ஆம்பள படத்தின் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பர் என்ற கூடுதல் செய்தியும் வெளியாகியுள்ளது. ஆனால் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி இல்லை என்றும் தமன்னா என்றும் கூறப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் படம் எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது, ஆனால் அயோக்யா பட வெளியீட்டு பிரச்சனைகளால் தாமதமாகிவிட்டது என்கின்றனர் படக்குழுவினர்.