fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சொன்ன அட்வைஸ்

படப்பிடிப்பு முடிந்து நடிகர் விஜய் செல்லும் போது அவரைப் பின் தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் சொல்லியிருக்கிறார் இது வலைதளங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருக்கு 63-வது படம். விஜய் 63 ல் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, ஆனந்த்ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்தது. இப்படத்தில் நடிகர் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சொன்ன அட்வைஸ்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செட் போட்டு இப்படப்பிடிப்பை நடத்தி வருகிறார் அட்லி. தினமும் விஜய்யை காண படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஏராளமான ரசிகர்கள் கூடுகிறார்கள். மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பின் போது வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் விஜயைக் காண கூடினர்.

அதன்பிறகு காட்டாங்கொளத்தூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கும் ரசிகர்கள் கூடினார்கள்.

படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் காரில் புறப்பட்டபோது ஏராளமான ரசிகர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். இதனால் கார் கண்ணாடியை இறக்கி பின்தொடர்ந்து வரவேண்டாம், பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

ரசிகர்களுக்கு அவர் அறிவுரை சொல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

மருத்துவமனையில், பிரபல நடிகைக்கு நேர்ந்த அவலம் !

TamilTwin India

சூட்டிங்கில் ஸ்பாட்டில் விபத்துக்களை தடுக்க 15 பேர் கொண்ட பாதுகாப்புக் குழு !

TamilTwin India

சிவகார்த்திகேயனுடன் இணையும் விவேக்

N N