fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

இரண்டு கதாநாயகிகளுடன் நடிகர் உமாபதி ராமையா

உமாபதி ராமையா தமிழ் திரைப்பட நடிகர். இவர் நடிகர், இயக்குனர் தம்பி ராமையாவின் மகன். 2018 ல் வெளியான மணியார் குடும்பம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். இப்பொழுது உமாபதி ராமையா தேவதாஸ் படத்தில் நடித்துள்ளார். அதில் இரண்டு கதாநாயகிகளுடன் நடித்துள்ளார்.

அதாகப்பட்டது மகா ஜனங்களே,  மணியார் குடும்பம்,  திருமணம்  போன்ற படங்களையடுத்து  தொடர்ந்து.  இயக்குனர்  இரா மகேஷ் இயக்கத்தில் உமாபதி ராமையா, யோகி பாபுவுடன் சேர்ந்து நடித்துள்ள படம் தேவதாஸ். இப்படத்தில் உமாபதி  இரண்டு கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். இதில் யோகிபாபு படம் முழுவதும் நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். மனிஷா யாதவ், சகா ஐரா  இருவரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் உமாபதியோடு இணைகின்றனர்.

இரண்டு கதாநாயகிகளுடன் நடிகர் உமாபதி ராமையா

                இப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டுமே வந்து செல்லும், ஆனால் அளவில்லா இன்பமும் துன்பமும் ஒரே நேரத்தில் வருவதால் ஏற்படும் விளைவை இப்படம் எடுத்து கூறுகிறது. இப்படத்தை பார்க்கும் போது பார்க்கும் மனிதரின் வாழ்வில் நடந்த இன்ப, துன்பங்களை நினைவு படுத்துவதாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வெளியானது கமலி ப்ரேம் நடுக்காவேரி படத்தின் டீசர் !

TamilTwin India

சுசீந்தரம் கோயிலில் அரை மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த நயன்தாரா!!

N N

மூன்று மொழிகளில் கலக்க வரும் யோகி பாபு, “விரைவில் OTT மற்றும் Satellite தளத்தில்”..!

TamilTwin India