fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

நேற்று நடந்த கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக வில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார்.

     நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய ராதாரவி மீது இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள். இந்த வகையில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதனால் அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளார். திமுக செயலாளர் அன்பழகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும் அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கூறி இருக்கிறார் அன்பழகன்.

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

     இந்த சஸ்பெண்ட் தொடர்பாக மு.க.ஸ்டாலின் அவரது டுவிட்டரில் பதிவிட்டது. “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் நடிகர் ராதாரவி திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்து பேசிய கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்று தலைவர் கூறியுள்ளார்.  

Related posts

சிறுமியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட அரை கிலோ முடி, காலியான ஷாம்பு பாக்கெட்டுகளும்: தமிழ் நாட்டில் ஆச்சரியம்

World News

காஷ்மீர் தலைவர்களுக்கு ஒன்றரைவருடம் வீட்டுச் சிறை

World News

கல்லூரி மாணவிக்கு காதலன் பிரசவம் பார்த்ததால் நேர்ந்த விபரீதம்

World News