fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஓராண்டு சிறைத்தண்டனை பெற்ற நடிகர் மோகன்பாபு

செக் மோசடி வழக்கில் தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன்பாபுவுக்கு ஒராண்டு சிறைத் தண்டனை விதித்து ஹைதராபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

     கடந்த 2010 ம் ஆண்டில் இயக்குநர் ஒய்.வி.எஸ்.செளத்ரி இயக்கத்தில் சலீம் என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு செலவுக்காக தெலுங்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மோகன்பாபு ரூ. 40.50 லட்சம் காசோலையை இயக்குநரிடம் அளித்தார். ஆனால் அந்தக் காசோலை பணமில்லாமல் வங்கியில் இருந்து திரும்பி விட்டது. இதனால் மோகன்பாபு மீது செளத்ரி கடந்த 2010 ம் ஆண்டில் ஹைதரபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 ஓராண்டு சிறைத்தண்டனை பெற்ற நடிகர் மோகன்பாபு

      9 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதில், நடிகர் மோகன் பாபுவிற்கு 1 வருட சிறை தண்டனையும், 41 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அபராதத் தொகையை மோகன்பாபு ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.  இதுகுறித்து மோகன் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், சில தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகள் பரப்புவதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நான் ஐதராபாத்தில் உள்ள என் வீட்டில் இருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

Related posts

அட்லீயை கைவிட்ட ஷாருக்கான் !

TamilTwin India

கோர தாண்டவம் ஆடும் கொரோனா, டாக்டராக மாறிய நடிகர் !

TamilTwin India

பாடகராக அறிமுகமாகும் நடிகர் சரத்குமாரின் மகன் !

TamilTwin India