fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

17 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்யும் ஆர்யா

தமிழ் சினிமாவில் நடிகர்களில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் ஆர்யா. எப்போதுமே தன்னை சுற்றியுள்ளவர்களுடன் கலகலப்பாக இருப்பவர் மற்றும் இன்றைய இளைஞர்களின் கனவு நாயகன். இவருடைய திருமணம் பற்றி எப்போதும் வதந்திகள் வந்த வண்ணமே இருக்கும்.

நடிகர் ஆர்யா ஒரு படத்தில் ஒப்பந்தமாகி விட்டால் போதும் அவர்க்கும் அந்தப்படத்தின் நாயகிக்கும் திருமணம் என்ற வதந்தி வரத்தொடங்கிவிடும். இருப்பினும் இவரின் கலகலப்பான கேரக்டரால் ஹூரோயின்களும் அதை ஒரு பெரிய விஷயமாகக் கண்டுகொள்ளமாட்டார்கள்.

17 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்யும் நடிகர் ஆர்யா

இவருக்கும் பிரபல நடிகை சயீஷாவுக்கு திருமணம் என்ற செய்தி வெளியானது, ஆனால் இது வதந்தியாக இருக்கும் என எல்லோரும் நினைத்திருந்த இந்த நிலையில் ஹைதராபாத்தில் திருமணம் நடக்க இருக்கிறது இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பலமாக நடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உறவினர்கள், சில பிரபலங்கள் கலந்து கொள்ள நடந்துள்ளது.

இதில் பாலிவுட் சினிமாவின் டாப் ஸ்டார் சஞ்சய் தத் மற்றும் சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் நடக்கவிருக்கிற நிலையில் நெட்டிசன் கள் ஆர்யாவுக்கும் சயீஷாவுக்கும் இடையேயான வயது வித்தியாசத்தை கேலி செய்து வருகின்றனர்.

சயீஷாவின் வயது 21, ஆர்யாவின் வயது 38 ஆகும்.

Related posts

ஏ.ஆர்.ரஹ்மானின் மெய்மறந்த பாடல், கோவிந்த் வசந்தா கண்ட கனவு !

TamilTwin India

ஹரிஷ் கல்யாணுடன் காதலை மீண்டும் உறுதிப்படுத்திய ரைசா

TamilTwin India

பிக்பாஸ் முகேன் வீட்டில் நேர்ந்த திடீர் சோகம்! கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்

TamilTwin India