பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

2020ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேறுகளின் பிரகாரம் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ள மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட மாணவர்கள் இன்று முதல் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.