இலங்கையில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை

ஐந்தாம் வகுப்பில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை அக்டோபர் 15 முதல் மீண்டும் திறக்க கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கிறது என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் ஏற்கனவே சுகாதார அமைச்சிடம் இருந்து கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் பாடசாலைச் சூழலை சுத்தம் செய்ய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் முடிந்த பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு ஏற்கனவே ஒரு முறையை உருவாக்கியுள்ளது,
அனைத்துப் பாடசாலைகளையும் சுத்தம் செய்ய குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும்.

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை மீண்டும் தொடங்கு வதற்குத் தேவையான பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சின் செயலாளரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், பல்வேறு நிலைகளில் பாடசாலைகளை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.