பிரித்தானியாவில் படையினரை பெற்றோல் விநியோக செயற்பாடுகளில் ஈடுபடுத்த நடவடிக்கை

பிரித்தானியாவில் உக்கிர நிலையை அடைந்திருக்கின்ற எரிபொருள் விநியோக செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவரும் நோக்கில் இராணுவச் சிப்பாய்களை விநியோக செயற்பாடுகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

எரிபொருள் விநியோக பணிகள் நாளை மறுதினம்(04) திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பவுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் படையினரை ஈடுபடுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்காக சுமார் 300 பேர்வரை தற்காலிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.