நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் ஆர்யா 2005 – ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து கலாபக் காதலன், நான் கடவுள், மதராசபட்டினம், வேட்டை, சேட்டை, கடம்பன், கஜினிகாந்த் என பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். இந்நிலையில் இவருக்கு பெண் பார்க்கும் படலம் தீவிரமானது.

நடிகை சாயிஷா வனமகன் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். வனமகன் படத்தினை தொடர்ந்து ஜூங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கும் நடிகர் ஆர்யாவிற்கும் கஜினிகாந்த் படத்தில் நடித்த பொழுது காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 14 ஆர்யா மற்றும் சாயிஷா திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் அறிவித்து இருந்தனர். இன்று இருவருக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர் நடிகைகள் உட்பட கிரிக்கெட் வீரர்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.