fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஜித்தன் ரமேஷ் பட போஸ்டரை வெளியிடும் ஆர்யா

                நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜித்தன் ரமேஷ் நடித்து இருக்கும் படம் ஒங்கள போடணும் சார்.  ஜித்தன் ரமேஷ் நடித்த ஜித்தன் படம் நல்ல வரவேற்ப்பினை பெற்று இருந்தது, இருந்தும் அவரின் அடுத்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வரவேற்ப்பினை பெறவில்லை.  ஒங்கள போடணும் சார் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட இருக்கிறார். 

ஜித்தன் ரமேஷ் பட போஸ்டரை வெளியிடும் ஆர்யா

      ஒங்கள போடணும் சார் படத்தில் ஜித்தன் ரமேஷ் உடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய அறிமுக கதாநாயகிகள் நடிக்கின்றனர்.  இப்படத்தினை ஸிக்மா பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிக்கிறார்.  இரட்டை இயக்குநர்களான ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்குகின்றனர்.  முருகன் மந்திரம் இப்படத்திற்கு பாடல்கள் எழுதி உள்ளார். இவர் இப்படத்திற்கு வசனங்களும் எழுதி இருக்கிறார்.  மேலும் இவர் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

      மார்ச் 7 – ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக நடிகர் ஆர்யா இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார். 

Related posts

பொம்மை மாதிரி இருக்கீங்க, யாஷிகாவின் புகைப்படத்தை புகழும் ரசிகர்கள்!

TamilTwin India

ராஜமவுலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ஆலியா பட்

N N

50வது நாளில் பிகில் மற்றும் கைதி

TamilTwin India