7 மாதங்களாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேச மாநிலத்தின் அக்பர் என்பவர் டிரைவராக வேலைபார்த்து வந்துள்ளார். அவரின் மனைவி ஷ்ரத்தா.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷ்ரத்தா அவரது கணவருடன் டூவீலரில் பயணம் செய்துள்ளார்.
அப்போது அவர்கள் சென்ற வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியுள்ளது, இந்த இபத்தில் அக்பருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

ஆனால் ஷ்ரத்தாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஷ்ரத்தாவுக்கு பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் 40 நாள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
கோமா நிலையில் ஷ்ரத்தா இருந்துவந்த நிலையில் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கலைக்க கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும் என்று டாக்டர்கள் கூற, குழந்தையை வளர்ப்பதாய் அக்பர் கூறியுள்ளார்.
குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்தநிலையில் நேற்று ஷ்ரத்தாவுக்கு பெண் குழந்தை சுகப் பிரசவ முறையில் பிறந்துள்ளது.
பிரசவ நேரத்தின்போது ஷ்ரத்தாவின் கண்கள் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.