Thursday, December 1, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்உயிருக்குப் போராடும் மனைவி.. கனவுத் திருமண ஆசையை நிறைவேற்றிய காதல் கணவர்!

உயிருக்குப் போராடும் மனைவி.. கனவுத் திருமண ஆசையை நிறைவேற்றிய காதல் கணவர்!

மனைவி வாழ்வுக்குப் போராடும் நிலையில் கனவு திருமணத்தினை நடத்திவைத்து கணவன் ஆச்சரியப்படுத்திய சம்பவம் லண்டனில் நடைபெற்றுள்ளது.

லண்டன் கேட்போர்டு பகுதியில் வசிப்பவர்கள் அலெக்ஸ்- கிர்ஸ்டி பீல்டிங் ஜோடி. இந்த ஜோடி 10 ஆண்டுகளாகக் காதலித்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் சூழ 2019 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தாமஸ் என்ற குழந்தை கிர்ஸ்டிக்குப் பிறந்தது. குழந்தை பிறந்தபின்னர் இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டு இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கிர்ஸ்டிக்கு சர்கோமா புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.

கிர்ஸ்டியின் புற்றுநோய் இறுதிக் கட்டத்தில் உள்ளநிலையில் அலெக்ஸ் கிர்ஸ்டியின் மிகப் பெரிய ஆசையான டிஸ்னிலேண்ட் திருமணத்திற்கு ப்ளான் போட்டார்.

இதனைத் தொடர்ந்து கிரிஸ்டி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில் டிஸ்னிலேண்ட் செட்டை உருவாக்கி, கிர்ஸ்டியைத் திருமணம் செய்துள்ளார்.

மனைவி வாழ்வுக்குப் போராடும் நிலையில் கணவன் செய்த இந்த செயல் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular