Thursday, December 1, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்18 ஆண்டுகாலம் விமான நிலையத்திலேயே உயிர் வாழ்ந்த வினோத நபர்..!

18 ஆண்டுகாலம் விமான நிலையத்திலேயே உயிர் வாழ்ந்த வினோத நபர்..!

ஈரானியத் தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் பிறந்தவர் கரேனி நஸ்சேரி. இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றவர் 1974 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார்.

திரும்பிய உடன் அங்கே நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஈரான் மன்னருக்கு எதிராகக் களம் இறங்கி போராடியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட கரேனி நஸ்சேரியை ஈரான் மன்னர் பாஸ்போர்ட்டை வாங்கிவைத்துக் கொண்டு நாடு கடத்தினார்.

ஈரான் விமான நிலையத்தில் விடப்பட்ட இவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் இவரால் எந்த நாட்டுக்கும் செல்ல முடியவில்லை.

அதன்பின்னர் பாரீஸ் விமான நிலையம் வந்தடைந்த கரேனி நஸ்சேரியினை போலீசார் கைது செய்ய முனைந்தனர்.

ஆனால் இவரிடம் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லாததால் நஸ்சேரியை கைது செய்ய முடியாமல் சென்றது காவல்துறை.

அதன்பின் கரேனி பாரீஸ் விமான நிலையத்திலேயே தங்கி வாழத் துவங்கியுள்ளார். இப்படியே 18 ஆண்டுகள் விமான நிலைய இருக்கைகளில் தூங்கி, அங்குள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் இவரை பாரீஸ் முகாமில் அனுமதிக்கப்பட இவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கரேனி விமான நிலையத்துக்கு திரும்பி வாழ்ந்துவந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்துள்ளார்.

கரேனியின் வாழ்க்கையினை மையமாகக் கொண்டு உருவான ரெட்மினல் திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது,  

RELATED ARTICLES

Most Popular