பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்

ரத்தோட்டை, சுது கங்கையில் ஜமன்வத்தை பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இரண்டு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.