Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்அரசினைக் கண்டித்து குண்டும் குழியுமான சாலையில் திருமணக் கோலத்தில் பெண் எடுத்த போட்டோஷுட்!

அரசினைக் கண்டித்து குண்டும் குழியுமான சாலையில் திருமணக் கோலத்தில் பெண் எடுத்த போட்டோஷுட்!

மோசமாக இருந்த சாலையில் அரசினைக் கண்டிக்கும் வகையில் மணப்பெண் போட்டோஷுட் நடத்திய சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரளாவின் நம்பூர் அருகே உள்ள இடம்தான் புக்கொட்டுப் பாலம், அந்தப் பகுதியில் வசித்து வருபவர் நிதிஷா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமண மண்டபத்திற்கு காரில் குடும்பத்துடன் சென்றுள்ளார் நிதிஷா. ஆனால் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக இருந்துள்ளது.

இதனால் காரில் செல்லவும் கஷ்டமாக இருந்ததையொட்டி காரில் இருந்து இறங்கி மோசமான சாலையைக் கடந்துள்ளார்.

மேலும் அவர் சாலை பரமாரிக்கப்படாமல் மோசமாக இருப்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் மணப்பெண் கோலத்தில் அந்த சாலையில் போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

மேலும் நிதிஷா அரசினைக் கண்டிக்கும் வகையில் அந்த போட்டோஷுட் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நிதிஷாவின் இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நிதிஷாவின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவிப்பதுடன், கேரள மாநில அரசினைக் கண்டிக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular