வறுமையால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் பருகிய தாய்!

வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் ஒருவர் தானும் விஷத்தை பருகி 3 குழந்தைகளுக்கும் விஷம் பருக்கிய சம்பவம் பதுளை – வேவெல்ஹின்ன தோட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது.

31 வயதுடைய தாய், 7, 5 மற்றும் 4 வயதுடைய மூன்று பிள்ளைகளுமே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார சுமை காரணமாக தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பிரதேசவாசிகள் குறித்த நால்வரையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் வைத்தியர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.