அமெரிக்காவில் ஒரே தேதியில் பிறந்தநாள் கொண்ட தம்பதிக்கு அதே தேதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறிய அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தின் ஹன்ட்ஸ்விலே பகுதியைச் சார்ந்தவர் காசிடி.
இவரின் மனைவியின் பெயர் டைலான் ஸ்காட். காசிடி- டலான் ஸ்காட் இருவரும் ஒரே தேதியில் பிறந்தவர்கள். அதாவது இவர்கள் இருவரின் பிறந்தநாளும் டிசம்பர் 18 ஆம் தேதியாகும்.
இவர்கள் இதனை ஸ்பெஷலாக நினைத்துப் பிறந்தநாளைக் கொண்டாடி வந்துள்ளனர்.
இந்தநிலையில் டலான் கர்ப்பமானதை அடுத்து அவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
டலானுக்கு அதே டிசம்பர் 18 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. மகளுக்கு லெனான் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த வியக்கவைக்கும் சம்பவத்தினை அலபாமா மருத்துவமனை தங்களுடைய பதிவேட்டில் பதிந்துள்ளது. மேலும் இதுகுறித்து தங்களின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
தாங்கள் பிறந்த அதே தேதியில் தங்களுடைய மகளும் பிறந்துள்ளது குறித்து காசிடி- டலான் தம்பதியினர் மருத்துவமனையில் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடியுள்ளனர்.