Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்366 ரூபாய் சுடிதாருக்கு 6 லட்ச ரூபாய் கார் பரிசு.. பெண்ணிடம் நூதனமாக பணம் பறித்த...

366 ரூபாய் சுடிதாருக்கு 6 லட்ச ரூபாய் கார் பரிசு.. பெண்ணிடம் நூதனமாக பணம் பறித்த ஆசாமி!

ஆன்லைன் ஷாப்பிங்க் தளமான  மீசோ தளத்தில் சுடிதார் வாங்கிய பெண்ணுக்கு கார் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி பணம் பறித்த சம்பவம் திருவாரூரில் அரங்கேறியுள்ளது.

திருவாரூரைச் சார்ந்த கூத்தாநல்லூர் கிராமத்தை அடுத்த வாழச்சேரி கிராமத்தைச் சார்ந்தவர் தனலட்சுமி.

இவர் ஆன்லைன் ஷாப்பிங்க் தளமான மீசோ ஆப் மூலம் 366 ரூபாய்க்கு சுடிதார் ஒன்றினை வாங்கியுள்ளார்.

மீசோ சுடிதார் டெலிவரி ஆன சில நிமிடங்களிலேயே தனலட்சுமியின் மொபைலுக்கு கார் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி கால் ஒன்று வந்துள்ளது.

மேலும் கார் வேண்டுமா? அல்லது காருக்குப் பதிலாக பணம் வேண்டுமா? என்று கேட்டுள்ளனர்.

மேலும் கார் டெலிவரி ஆக மூன்றுநாள் ஆகும் என்றும், பணம் என்றால் உடனடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் பணத்தினை வாங்க வேண்டும் என்றால் 3600 ரூபாய் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தனலட்சுமி 3600 ரூபாய் பணத்தினை கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார்.

மேலும் 6 லட்சம் ரூபாய் கார் வேண்டும் என்றால் 18000 ரூபாய் கட்டக் கூறிய நிலையில் அதனையும் கட்டியுள்ளார் தனலட்சுமி.

பணம் விடிந்ததும் வங்கிக் கணக்கிற்கு வரும் என்று கூறிய நிலையில் மொபைல் நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது.

இதனையடுத்து தனலட்சுமி திருவாரூர் சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular