திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சார்ந்த சிறுவன் மனித கால்குலேட்டர் என்ற பட்டத்தினை வென்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சார்ந்தவர் அபினவ். அபினவுக்கு தற்போது 8 வயதாகின்றது.
3 ஆம் வகுப்பில் தற்போது கல்வி கற்கும் அபினவுக்கு சிறுவயது முதலே கணக்குப் போடுதல் என்றால் அத்துப்படி.
பலரும் மனதில் கணக்குப் போடத் தடுமாறி இன்றைய காலத்தில் மொபைல் கால்குலேட்டர்களையோ அல்லது கால்குலேட்டர் மெசின்களையோதான் கணக்குப் போடப் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் அபினவோ கால்குலேட்டர் கொண்டு கணக்குப் போட வேண்டியவற்றையும் மனதில் கணக்குப் போட்டு விடை சொல்கிறான்.
அபினவின் கணக்குப் போடும் திறமையைப் பாராட்டி இந்தியன் ரெக்கார்ட் புக்ஸ் ஹியூமன் கால்குலேட்டர் என்ற பட்டத்தைக் கொடுத்துப் பாராட்டியுள்ளது.
அபினவைச் சந்தித்துப் பேசுகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்களிடம் தன்னுடைய கணிதத் திறமையைக் காட்ட வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று மழலை மொழியில் கூறியுள்ளார்.
அபினவ் குறித்த செய்தி அறிந்த பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.