Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்பிறந்தநாளின்போது வாங்கிய கேக்கால் 3 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

பிறந்தநாளின்போது வாங்கிய கேக்கால் 3 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

திருவண்ணாமலையில் மகளின் பிறந்தநாளின் போது வாங்கிய பழைய கேக்கால் குழந்தை மயங்கி விழுந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருவண்ணாமலையில் ஆதாம்- ஃபரிதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷாபியா மூன்று வயது குழந்தை உள்ளார்.

குழந்தையின் 3 வது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டாடியுள்ளனர் ஆதாம் – ஃபரிதா தம்பதியினர்.

குழந்தையின் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட நினைத்து கேக்கினை திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் கேக் வாங்கியுள்ளனர்.

கேக்கினை குழந்தை ஷாபியா சாப்பிட்ட நிலையில் குழந்தை வாந்தி எடுத்ததுடன் மயக்கம் அடைந்து சரிந்து விழுந்துள்ளது.

பதறிப் போன ஆதாம் – ஃபரிதா ஜோடியினர் குழந்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து ஆதாம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சென்று பேக்கரி உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

பேக்கரி உரிமையாளர் கேக்கைச் சாப்பிட்டு குழந்தை மயக்கம்தானே போட்டது செத்தா போனது? என்று கோபமாகக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆதாம் மற்றும் அவரது நண்பர்கள் பேக்கரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் பலரும் இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular