Saturday, June 25, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்31 பர்கர்களை ஆர்டர் போட்ட 2 வயது சிறுவன்.. டெலிவரியான பர்கர்களைக் கண்டு ஷாக்கான தாய்!

31 பர்கர்களை ஆர்டர் போட்ட 2 வயது சிறுவன்.. டெலிவரியான பர்கர்களைக் கண்டு ஷாக்கான தாய்!

அமெரிக்காவில் தாயின் மொபைல் பயன்படுத்தி 31 பர்களை ஆன்லைன் முறையில் 2 வயது குழந்தை ஆர்டர் செய்த சம்பவம் வைரலாகி உள்ளது.

அதாவது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் கிங்ஸ்வில்லே பகுதியில் வசிப்பவர் கெல்சி புர்க்கால்டர் கோல்டன். இவருக்கு 2 வயது நிரம்பிய பார்ரெட் என்ற மகன் உள்ளார்.

செல்போனில் கார்ட்டூன் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள பார்ரெட், நேற்று செல்போனில் உணவு ஆர்டர் செய்யும் ஆப்பில் 31 சீஸ் பர்கர்களை ஆர்டர் போட்டுள்ளார்.

31 சீஸ் பர்கர்களுடன் உணவு டெலிவரி பாய் வீட்டுக்கு வந்ததும் கெல்சி ஷாக்காகி நான் ஆர்டர் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

அதன்பின் ஊழியர் அறிவுறுத்தலின்பேரில் மொபைல் ஆப்பில் சென்று பார்த்தபோது 31 பர்கள் ஆர்டர் போட்டது தெரிய வந்தது.

மேலும் பர்கர் டெலிவருக்கு 16 டாலர் டிப்ஸ் வழங்கியுள்ளார். கெல்சி பேஸ்புக்கில் 31 சீஸ் பர்கர்கள் உள்ளதாகவும், இலவசமாக தருவதாகவும் அறிவித்து போஸ்ட் போட்டுள்ளார்.

கெல்சியின் நண்பர்களும் தெரிந்தவர்களும் பர்கரை வீட்டிற்கு வந்து வாங்கிச் சென்றுள்ளனர், மேலும் சிறுவனின் குறும்புச் செயல் குறித்து கிண்டலடித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular