fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

90 ml படத்தால் ஓவியா மீது போலீஸில் புகார்

               நடிகை ஒவியா நடித்து தற்போது திரை அரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கும் படம் 90 ml.  மோனிஷா ராம், மசூம் சங்கர், ஸ்ரீ கோபிகா, பொம்மு லக்ஷ்மி ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் இசை அமைத்து உள்ளார்.  இப்படத்தினை அனிதா உதூப் இயக்கி உள்ளார்.  தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.  ரசிகர்கள் இடையே இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில் ஒரு சிலரிடம் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது.

      இப்படம் பெண்களின் புனிதத்தினையும், பெருமைகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.  குழந்தைகளை சீரழிக்கும் வகையிலும் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.  மேலும் இப்படத்தில் மது அருந்துதல், புகைப் பிடித்தல், படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையான வசனங்கள் போன்ற கலாச்சார சீரழிவு இப்படத்தில் இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.  இவ்வாறு இந்திய தேசிய லீக் கட்சியின் மகளின் அணியினர் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.  இப்படத்தில் நடிகை ஓவியா, இயக்குநர் அனிதா உதூப் மற்றும் படத்தில் நடித்து உள்ளவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளனர். சமூக பிரச்சினைகளில் அல்லது பெண்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது மாதர் சங்கங்கள் அல்லது கட்சியினர் வராது திரைப்படங்களுக்கு மட்டும் போர்க்கொடி தூக்குவது ஏன் என இன்றும் மக்கள் புரியாத நிலையில் உள்ளனர்.

Related posts

இணையத்தில் வைரலாகும் விக்ரமின் சிக்ஸ்பேக் புகைப்படம்..!

TamilTwin India

கையில் மது பாட்டிலுடன் ஆண் நண்பர்களுடன் நடிகை அமலா பால், வைரலாகும் போட்டோ..!

TamilTwin India

சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜாவுடன் முத்த காட்சி

N N