Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்ஒரு வீட்டில் ஒன்றாக வசிக்கும் 72 பேர்.. ஒருநாளைக்கு அசைவ உணவு செய்ய 70 ஆயிரம்...

ஒரு வீட்டில் ஒன்றாக வசிக்கும் 72 பேர்.. ஒருநாளைக்கு அசைவ உணவு செய்ய 70 ஆயிரம் செலவாகுமாம்!

கூட்டுக் குடும்பம் என்பது ஒரு காலத்தில் மிகச் சாதாரணமாக இருந்தநிலையில் தற்போது அதனைப் புத்தகங்களில் பார்க்கவும், படிக்கவும் மட்டுமே முடிகின்றது.

மூன்று முதல் நான்கு பேர் இருக்கும் குடும்பங்களே தற்போதைக்கு நாம் பார்க்கும் குடும்ப அமைப்புகளாக உள்ளது.

ஆனால் இந்தக் காலகட்டத்திலும் 72 பேர் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வரும் செய்தி கேட்டால் நம்மில் பலருக்கும் ஷாக்காகவே இருக்கும்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நான்கு தலைமுறையினைச் சார்ந்தவர்கள் ஒரே குடும்பத்தில் வசித்துவருகின்றனர்.

அதாவது இவர்கள் கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். 100 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் இருந்து சோலாப்பூர் குடி பெயர்ந்துள்ளனர்.

அங்கு வாடகைவீட்டில் 8 சகோதரர்கள், 2 சகோதரிகளிடன் தொப்பி விற்கும் வேலையினைச் செய்து வந்துள்ளனர்.

காலப்போக்கில் பெட்ஷிட், துணிகள் போன்றவற்றினை விற்பனை செய்யும் தொழிலாக விரிவாக்கம் செய்துள்ளனர்.

அதன்பின்னர் இவர்கள் பிரிய மனமில்லாமல் ஒவ்வொருவரும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வசிக்கத் துவங்கியுள்ளனர்.

72 பேர் வசிக்கும் இந்த வீட்டிற்கு ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் செலவாகுமாம். மேலும் ஒரு நாளைக்கு காய்கறி வாங்க ரூ.2000 செலவாகுமாம்.

மேலும் ஒருநாளைக்கு அசைவ உணவு செய்ய ரூ.10000 செலவாகுமாம். மேலும் ஒரு சிலிண்டர் மூன்று முதல் நான்கு நாளைக்குத் தான் பயன்படுத்த முடியுமாம்.

அரிசி, கோதுமை மாவு மூட்டைகளை 50 மூட்டை என்ற கணக்கில் வருடத்திற்கு வாங்கிக் கொள்வார்களாம்.

RELATED ARTICLES

Most Popular