அக்னிபாத் என்ற திட்டத்தினை இந்தியாவில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு இந்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது.
அதாவது இந்திய ராணுவத்தின் முப்படைகளான தரைப்படை, விமானப்படை, கடற்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியானது நிரப்பப்பட உள்ளது.
இந்த ஒப்பந்த பணியிடங்களுக்கு 17 அரை வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.
மேலும் இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 24 ஆம் தேதி முதல் துவங்கியது.
24 ஆம் தேதி துவங்கி ஜூலை 5 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 56,960 பேர் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து போஸ்ட் போட்டுள்ளனர்.
மேலும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இதில் சேர்வதற்கான ஆன்லைன் தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளதாம்.