fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » கட்டாரில் 557 இலங்கையர்கள் மரணம்
இலங்கைச் செய்திகள் உலகச் செய்திகள் செய்திகள்

கட்டாரில் 557 இலங்கையர்கள் மரணம்

கட்டாரில் கடந்த 10 வருடங்களிற்குள் 6500ற்கும் அதிகமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பல்வேறு விபத்துக்களில் பலியாகியிருக்கின்றனர்.

2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிற்கான அனுசரணை நாடாக கட்டார் கடந்த 10 வருடங்களாக அதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களே இவ்வாறு பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் இலங்கையைச் சேர்ந்த 557 பேர் உயிரிழந்துள்ளதுடன் பிலிப்பைன்ஸ், கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

சட்டவிரோத மணல் அகழ்வினைத் தடுக்கக் கோரி யாழ்.நகரில் இன்று போராட்டம்

TamilTwin

யாழில் கொரோனா பரிசோதனை: வெளியான மகிழ்ச்சி முடிவு!

N N

முதன்முறையாக புதிய கிரக மண்டலம் கண்டுபிடித்து சாதித்த இலங்கை விஞ்ஞானிகள்!

TamilTwin