fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5460 கொரோனாத் தொற்று உறுதி!!

சீனாவில் 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளான நாடுகளால் இந்தியாவும் ஒன்று, இந்தியாவினைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, தமிழ்நாடு, இராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில்தான் கொரோனாத் தொற்றானது அதிக அளவில் இருந்தது.

அந்தவகையில் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனாத் தொற்றின் வீதமானது குறைந்து காணப்படுகின்றது.

ஆனால் மகாராஷ்டிராவில் கொரோனாத் தொற்றின் வீதமானது குறைந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 5000 என்ற அளவில் பதிவாகி வருகின்றது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5460 கொரோனாத் தொற்று உறுதி!!

இந்திய சுகாதார அமைச்சகம் தற்போது இந்தியாவின் கொரோனாத் தொற்று குறித்த விவரங்களையும், பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான மகாராஷ்டிராவின் பாதிப்பு குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

அதாவது மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5640 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை கூறியுள்ளது,

மகாராஷ்டிராவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 17,68,695  ஆக உள்ளது.

இன்று ஒரே நாளில் 6945 பேர் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர், அதன்படி மொத்தமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,42,916 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 155 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 46,511 ஆக உள்ளது.

Related posts

தமிழ்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன

World News

கள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்த தாய்!

World News

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு

N N