மேலும் 51 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(26.09.2021) மேலும் 51 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும், 22 பெண்களும் அடங்குகின்றனர்.

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,731ஆக அதிகரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.