ஒமிக்ரோனால் பாதிப்படைந்த 50 வீதமானவர்கள்!

தற்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா தொற்றாளர்களில் 50 வீதமானவர்கள் ஒமிக்ரோன் நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது அதிக எண்ணிக்கையிலான அறிகுறியற்ற கொரோனா நோய்த்தொற்றுகளை அனுபவித்து வருவதாக அவர் கூறினார்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். அவற்றில் டெல்டா மாறுபாடுகள் இருக்கலாம் என்பதை மறந்து விடக்கூடாது என்றும் எச்சரிக்கிறார்.

நாட்டில் நாளாந்தம் 800க்கும் அதிகமான கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்படுவதாகவும் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தான் சென்ற இடங்கள் ஒன்றில் கூட கரோனா தொற்று ஏற்படலாம் என்ற எண்ணத்தில், சுகாதார அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.