fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

நீட் தேர்வில் 680 மதிப்பெண்ணுக்கு பதில் 37 மதிப்பெண்ணா?- அரியலூர் மாணவி அதிர்ச்சி!!

இந்தியாவில் மருத்துவர் சேர்க்கைக்கான நீட் தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்தது. அதற்கான நீட் தேர்வு முடிவுகளும் 16 ஆம் தேதி அக்டோபர் மாலை 4 மணிக்கு வெளியானது.

தமிழகத்தில் அனைவரும் எதிர்த்த இந்த நீட் தேர்வினை கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் மாணவர்கள் எழுதி, கடந்த ஆண்டைவிட அதிக அளவில் தேர்ச்சி பெற்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நீட் தேர்வு முடிவில் குளறுபடியானது ஏற்பட்டிருக்கலாம் என தமிழகத்தில் உள்ள அரியலூரைச் சார்ந்த மாணவி ஒருவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வில் 680 மதிப்பெண்ணுக்கு பதில் 37 மதிப்பெண்ணா?- அரியலூர் மாணவி அதிர்ச்சி!!

அரியலூரில் உள்ள தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த மஞ்சு நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என 2 ஆண்டுகளாக தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். அதிக அளவில் மதிப்பெண் வரும் என நினைத்த நிலையில் 37 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று இருக்க அதிர்ச்சியடைந்த அவர் நீட் தேர்வு முடிவில் குளறுபடி உள்ளதாகப் புகார் கூறியுள்ளார்.

மஞ்சு கூறுகையில், “நீட் தேர்வில் நான் 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்காத நிலையில் குறைந்தது 680 மதிப்பெண்கள் வரை பெறுவேன் என நினைத்த நிலையில் 37 மதிப்பெண்கள் என்பது நீட் தேர்வு ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 கேள்விகளுக்கு மட்டுமே நான் பதிலளிக்காத போது, 7 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் முடிவில் தெரியவந்துள்ளது. இதனால் என்னுடைய அசல் ஓ.எம்.ஆர். ஷீட்டை பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related posts

இந்து கோவில் கட்ட காணி வழங்கிய முஸ்லிம் குடும்பம்

World News

இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் திமுக நாடகமாடுகின்றது

World News

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,094 பேருக்கு கொரோனாத் தொற்று!!

TT Media