மேலும் 31 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 31 பேர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(12.10.2021) கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 20 ஆண்களும், 11 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,408 ஆக அதிகரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.