சேலம் அரசு மருத்துவமனையில் 3 பெண் குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தநிலையில், குழந்தையை பரமாரிக்க முடியாது என்று கூறி பெற்றோர் அரசிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலத்தைச் சார்ந்த கலா என்ற பெண் ஒருவர் பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு 3 பெண் குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது.
குழந்தைகள் எடை குறைந்து காணப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இன்குபெட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் குழந்தையின் பெற்றோர் மூன்று பெண் குழந்தைகளைப் பரமாரிக்க முடியாது என்று கூறி குழந்தையை வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பெற்றோர் குழந்தையினை வேண்டாம் என்ற முடிவில் பின் வாங்காமல் இருந்தனர்.
அதனையடுத்து குழந்தை சேலம் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தை வேண்டும் என்றால் பெற்றோர் மீண்டும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் இல்லையேல் குழந்தையினை தத்துக் கொடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.