fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள் செய்திகள்

80 கி.மீ. தூரம் நடந்து சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண்: குவிந்த பாராட்டுக்கள்

உத்தரப் பிரதேசத்தில் 80 கிலோ மீற்றர் தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண்ணின் உறுதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பெண் கோல்தி (வயது-20). இவருக்கும் அதே மாநிலம் கன்னோஜை சேர்ந்த வீரேந்திர குமாருக்கும் (வயது- 24) கடந்த மே-04 ஆம் திகதி  திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் ஊரடங்கு அமுலிலுள்ளமையால்  போக்குவரத்து வசதி இல்லை. அதனால், இருவரின் திருமணமும் தள்ளிப்போனது. இதனிடையே மணப் பெண்ணும், மணமகனும் போன் மூலமாகவே பேசி வந்துள்ளனர்.

ஊரடங்கு தொடர்ந்ததால் திருமணம் தொடர்ந்து தள்ளிப்போகவே ஒரு கட்டத்தில் மணப்பெண் கோல்தி கான்பூரிலிருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் கன்னோஜில் உள்ள மணமகன் வீரேந்திர குமார் வீட்டிற்குத் தனியாக நடந்து வந்து விட்டார். திடீரென்று மணப்பெண் வந்து சேர்ந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் திருமணத்தை அருகிலுள்ள கோவிலில் எளிமையாக நடத்தி முடித்தனர்.

திருமணத்திற்கு ஒரு சில உறவினர்களே வந்திருந்தனர். மணமக்கள் உட்பட அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக விலகலை கடைப்பிடித்தனர்.

மணப்பெண் துணிச்சலுடன் தனியாக 80 கிலோ மீற்றர் தூரம் நடந்தே சென்று மணமகனைக் கைப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

250 கிலோவில் ஐ.எஸ் இன் முக்கிய தலைவரை கைது செய்து லொறியில் ஏற்றி சென்ற பொலிஸார்

World News

அரசாங்க ஊடக பேச்சாளர்கள் நியமனம்

World News

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

World News