fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » நாட்டை வந்தடைந்தன மேலும் 20 இலட்சம் சைனோபோம் தடுப்பூசிகள்! (Photo)
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

நாட்டை வந்தடைந்தன மேலும் 20 இலட்சம் சைனோபோம் தடுப்பூசிகள்! (Photo)

மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று வியாழக்கிழமை(22) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.

தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்தன. குறித்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்ததன் பின்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த சைனோபாம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டை வந்தடைந்த 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளில், குருநாகல் மாவட்டத்துக்கு 4 இலட்சம் தடுப்பூசிகளும், காலி மாவட்டத்துக்கு 275,000 தடுப்பூசிகளும், மாத்தறை, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 இலட்சம் தடுப்பூசிகளும், புத்தளம், பொலனறுவை, நுவரெலியா, மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்குத் தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு 125, 000 தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

போலிகளை பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை

World News

டெங்கு காய்ச்சல்: யாழைச் சேர்ந்த பெண் மரணம் (Photo)

TamilTwin

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 4 பேர் பூரண குணம்

World News