fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விசேட மனுத் தாக்கல்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் உயர் நீதிமன்றத்தில் விசேட மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கியமக்கள் சக்தி சார்பாக கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. திருத்தத்தை நிறைவேற்றுவதாகவிருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் கருத்துக் கணிப்பு அவசியம் என அறிவிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தலை முடித்த 198 பேர் வெளியேற்றம்

SL News

கார் விபத்தில் நடிகர் மனோ மரணம், உயிருக்குப் போராடும் மனைவி

TamilTwin India

தங்கத்தின் விலை: ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

World News