fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

இறுதி காட்சிக்காக மட்டும் ரூபாய் 2 கோடி செலவு செய்யும் கென்னடி கிளப்

                கென்னடி கிளப், இத்திரைப்படம் பெண்கள் கபடியினை மையமாக வைத்து உருவாகி வருகிறது.  இப்படத்தில் நடிகர் சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.  சசிகுமார் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகக் கூடிய திரைப்படம் கென்னடி கிளப் தான்.  கென்னடி கிளப் திரைப்படம் ரூபாய் 15 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.  இப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பினை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 

இறுதி காட்சிக்காக மட்டும் ரூபாய் 2 கோடி செலவு செய்யும் கென்னடி கிளப்

      கென்னடி கிளப் படம் முழுவதும் விழுப்புரம் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.  விழுப்புரத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  கென்னடி கிளப் படத்திற்காக நிஜமான கபடி வீரர்கள் படப்பிடிப்பிற்காக வந்து உள்ளனர்.  ஏறத்தாழ 300 வீரர்கள் படப்பிடிப்பிற்காக டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர் பகுதிகளில் இருந்து வந்துள்ளனர்.  இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் 2 கோடி செலவில் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

Related posts

தனது இரண்டாவது கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்..!

TamilTwin India

இதனால் தான் ஸ்ரீதேவி இறந்தாரா! வெளியான பகீர் தகவல்

TamilTwin India

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘தமிழரசன்’ பட டீசர்!

TamilTwin India