அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 179 மில்லியன் டொலர்கள்!

அமெரிக்காவினால் 2.6 மில்லியன் தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கலுக்காக 179 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா இதுவரை 100 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 240 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதன் கீழ், இன்று காலை நாட்டிற்கு சுமார் 2 இலட்சம் பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.