
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று சனிக்கிழமை(23) 373 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அவர்களில் வடமாகாணத்தில் 16 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 12 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 3 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுதவிர யாழ்.கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
{செய்தித்தொகுப்பு:- எஸ். ரவி}