ஒரே மாவட்டத்தில் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.

கொல்கத்தா: மூன்றாவது கொரோனா அலை குழந்தைகளை பாதிக்கும் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் 130 குழந்தைகள் வரை கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று குழந்தைகளை தாக்குவது திடீரென அதிகரித்துள்ளதால் மிகுந்த கவனம் தேவை என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2021 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் குழந்தைகளை தொற்று தாக்குவது திடீரென அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தொற்று பாதிப்பு 2.80 சதவீதத்தில் இருந்து 7.04 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புக்குள்ளாகும் 100 பேரில் 7 பேர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருப்பதாக எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல பாதிப்புகளுடன் 130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலைமை மிக கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனாவின் 3-வது அலை பாதிப்பு குழந்தைகளை அதிகம் பாதிக்க கூடும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தைகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நாங்கள் நிலைமையை கண்காணித்து மருத்துவமனையின் உள்கட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்கிறோம், இதனால் யாரும் அனுமதி மறுக்கப்படுகிறார்கள். நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என்று மருத்துவமனை அதிகாரி தெரிவித்து உள்ளார்.