fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

13 மாவட்டங்களில் இன்று அனல் காற்று

சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது, “தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வரை வறண்ட வானிலை நிலவும். கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது . எனவே சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் , வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று இயல்பைவிட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்” என்றனர்.

13 மாவட்டங்களில் இன்று அனல் காற்று

    
திங்கள்கிழமை 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது, தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரியும், சேலம், தருமபுரியில் தலா 105 டிகிரியும், திருச்சி. திருத்தணி, மதுரை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் தலா 104 டிகிரியும், நாமக்கல்லில் 103 டிகிரியும், பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், கோவையில் 101 டிகிரியும் பதிவானது. ஆகவே இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த 13 மாவட்டங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கேரளாவில் இரவு நடை திட்டம்: ஆர்வத்துடன் பங்கேற்கும் பெண்கள்

World News

ஆந்திர விவசாயிகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்த இன்ப அதிர்ச்சி

N N

நாடு விட்டு நாடு மலர்ந்த காதல்! மூன்று முறைப்படி திருமணம்

World News