Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்12 உயர 10 வயதுக் குழந்தை.. அம்மாவைத் தேடி உலகம் முழுவதும் பயணம்!

12 உயர 10 வயதுக் குழந்தை.. அம்மாவைத் தேடி உலகம் முழுவதும் பயணம்!

12 அடி உயரத்தில் 10 வயது குழந்தை ஒன்று அதன் அம்மாவைத் தேடி வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதாவது இந்தக் குழந்தையின் பெயர் அமல், அமல் ஒரு அகதி. இந்த பொம்மையானது கடந்த ஓராண்டு காலமாக சிரியா, துருக்கிய நாடுகள் என மொத்தம் 8000 கி.மீக்கும் மேல் பயணம் செய்துள்ளதாம்.

இந்த பொம்மையானது உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள அகதி முகாம்களுக்குச் சென்று வருகின்றது.

இந்த அமல் பொம்மையானது தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள ஹேண்ட் ஸ்பிரிங்க் பெப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாம்.

இது கரும்பு மற்றும் கார்பன் ஃபைபர் என இலகு ரகப் பொருள்கள் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அமலைப் படைத்த படைப்பாளி அமல் 10 வயதுக் குழந்தை என்று, அது தன்னுடைய அம்மாவைத் தேடி பயணம் செய்வதாகவும் கூறுகிறார்.

சமீபத்தில் உக்ரைனில் உள்ள அகதிகள் முகாமுக்குச் சென்று அமல் தற்போது அமெரிக்கா விரைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மக்கள் அமலை மிகவும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular