fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அவுஸ்திரேலியா உலகச் செய்திகள் செய்திகள் புலம்

இலங்கையினரைப் பெருமைப்பட வைத்த 11 வயது சிறுமி!

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமியான ஜார்ஜியா, அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ‘ஜூனியர் மாஸ்டர் செஃப் 2020’ போட்டியில் வெற்றியடைந்துள்ளார்.

குறித்த போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஜார்ஜியா தனது பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்ட சமையல் மூலம் நடுவர் மன்றத்தையை ஆச்சரியப்படுத்தி வந்தார். இந்த நிகழ்வு அவுஸ்ரேலியாவில் மிகவும் பிரபலமானதுடன் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.

மேலும் இறுதி சமையல் போட்டியிலும் ஜார்ஜியா ஏனைய இரண்டு போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வெற்றியடைந்துள்ளார்.

குறித்த 11 வயது சிறுமி எப்படி இத்தகைய சுவையான உணவைத் தயாரிக்கின்றார்? என நடுவர் மன்றத்தினர் ஒவ்வொரு முறையும் மிகவும் ஆச்சரியத்துடன் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள்.

மேலும், அவுஸ்ரேலியா மற்றும் பிற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களையும் இலங்கையின் உணவு மற்றும் பானங்கள் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது தனித்துவமான திறன் அமைந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் நிலைமை மாறிய பின்னர் இலங்கை சுற்றுலாத்துறைக்கு இந்த நிகழ்வு நல்ல ஆதரவாக அமையும் எனப் பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

வலி. வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 29 ஆண்டுகள் பூர்த்தி: யாழ்.தெல்லிப்பழையில் சிறப்பு வழிபாடுகள் (Video)

TamilTwin

பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து! உயிரிழப்பு எண்ணிக்கை அதி உயர்வு!

World News

லட்சக்கணக்கானோர் விண்ணப்பம்: கைலாசா நாட்டை அமைத்தே தீருவேன் – நித்யானந்தா சவால்

World News