fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

100 கோடி ரூபா வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடுகிறது

கங்கனா ரணாவத் ஜான்சி ராணியாக நடித்த ‘மணிகர்னிகா’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தபடம் தயாரானபோதே வரலாறை திரித்து எடுப்பதாக எதிர்புகள் கிளம்பின. ஆயினும் டைரக்டர் கிரிசுடன் மோதல் ஏற்பட்டு கங்கனா ரணாவத்தே சில காட்சிகளை டைரக்ட் செய்தார்.

இந்தப்படத்தின் வசூல் ரூ100 கோடியைத் தாண்டி உள்ளது. இது கங்கனாரணாவத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

இது பற்றி அவர் கருத்தது தெரிவிக்கும் போது:
‘மணிகர்னிகா’ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் தயாரகி வெளிவந்தது. இந்தப்படத்திற்கு சர்ச்சைகளும் ஏற்பட்டன. அதையெல்லாம் மீறி ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது. இதனால் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றுதான் கூறவேண்டும்….

Related posts

தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறார் ரஜினி! டி.ராஜேந்தர் பளீர்

TamilTwin India

‘பட்டாஸ்’ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

TamilTwin India

சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாடி பாலாஜி

N N