Saturday, June 25, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. அதிரடியாக அறிவித்த இந்திய பிரதமர் மோடி!

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. அதிரடியாக அறிவித்த இந்திய பிரதமர் மோடி!

இந்தியா உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.

ஆனால் இத்தகைய பெரிய நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவரும் ஒன்றாக மாறியுள்ளது.

வேலையில்லாத் திண்டாட்டத்தினை சரிசெய்யக் கோரி பல ஆண்டுகளாக தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

தனி மனிதனின் அடிப்படை அம்சத்தினை ஆட்டிப் பார்ப்பதாக வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதால் எதிர்க் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் இதுகுறித்த குற்றச்சாட்டினை மத்திய அரசின்மீது தொடர்ந்து வைத்து வருகின்றது.

இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய பிரதமர் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதாவது பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகளின் மனித வள நிலை குறித்து மதிப்பாய்வு செய்தார்.

அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவது அரசால் செய்யப்பட வேண்டும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular