fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

சளிக்கு எதிரி பனங்கற்கண்டு

பனங்கற்கண்டு இதனை பனை வெல்லம் என்றும் அழைக்கலாம்.  இதன் பலன்கள் ஏராளம்.  ஆயுர் வேத மருந்துகளில் பனை வெல்லம் சேர்க்கப்படுகிறது.  இது பனை மரத்தில் இருந்து கிடைக்கிறது. 

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் வெல்லத்தினை இரண்டு வகைகளாக கூறுவர்.  கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு.  இவை இரண்டிலும் மருத்துவக் குணங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

சளிக்கு எதிரி பனங்கற்கண்டு

     பனங்கற்கண்டை பாலில் சேர்த்து குடித்தால் மார்புச்சளி நீங்கும், தொண்டைப் புண் வலி நீங்கும்.  உடலின் சூட்டினை குறைக்க பனங்கற்கண்டு பயன் படுகிறது.  கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவற்றை பனங்கற்கண்டு சரி செய்கிறது. 

இதில் கால்சியம் அதிக அளவில் காணப்படுகிறது.  இதனால் பல் ஈறுகள் உறுதி அடைகின்றன.  இருதயம் வலுவடைவதற்கும் பனங்கற்கண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது.  இதில் இரும்பு சத்து காணப்படுவதால் பித்தத்தினை நீக்குகிறது. 

சொறி, சிரங்கு போன்ற நோய்களை நீக்குகிறது.  கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

Related posts

சுவையான வேர்க்கடலை சாட்

N N

சப்பாத்திக்கு சாப்பிட ஏற்ற ருசியான முட்டை கீமா!

N N

சுவையான காலிஃப்ளவர் சூப்

N N